நிலாவையே கொடுத்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் - பிரபல நடிகை

Update: 2025-09-17 03:40 GMT

"ரூ. 1 கோடி சம்பளம்.. நீங்கள் நிலாவையே கொடுத்தாலும் பிக்பாஸ்க்கு வரமாட்டேன்" - மறுத்த பிரபல நடிகை

நீங்கள் எனக்கு நிலாவையே கொடுத்தாலும் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டேன் என நடிகை தனுஸ்ரீ தத்தா பேசியுள்ளார்.

தமிழில் நடிகர் விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் மூலம் நடிகை தனுஸ்ரீ தத்தா பிரபலமானர். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தனுஸ்ரீ தத்தா பிக்பாஸ் வாய்ப்பு கடந்த 11 ஆண்டுகளாக தனக்கு வந்ததாகவும், ஒவ்வொருமுறையும் அதை தவிர்த்ததாகவும் பேசியுள்ளார். மேலும் பிக்பாசில் கலந்து கொண்டால் 1 கோடி ரூபாய் வரை சம்பளம் அவருக்கு பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார். எனக்கு பணத்தை விட நிம்மதிதான் முக்கியம் என தனுஸ்ரீ தத்தா அவர்களிடம் கூறியதாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்