மதுரை ஒத்தக்கடை பகுதியில் அரசுப் பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திருச்சியிலிருந்து மதுரை வந்த அரசுப் பேருந்தும், சென்னை நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பேருந்தும் மோதியதில் அரசுப் பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் இரு பேருந்துகளில் பயணித்த 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, ஆம்புலன்ஸில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.