குரேஷியாவில் ராணுவத் தாக்குதலின் 30வது ஆண்டு நிறைவையொட்டி ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
கடந்த 1995ம் ஆண்டு குரேஷிய படையினர், செர்பிய கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீட்கும் நோக்கில் இந்த தாக்குதலை மேற்கொண்டனர். குரேஷிய சுதந்திரப் போரின் முக்கிய ராணுவ நடவடிக்கையாக ஆபரேஷன் ஸ்டார்ம் Operation Storm கருதப்பட்டது. இதன் 30ம் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில், தலைநகர் ஸேக்ரப்பில் Zagreb ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
குரேஷிய ராணுவ பலத்தை பறைசாற்றும் டாங்கிகள் அணிவகுத்ததுடன், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகளும் அரங்கேறின. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.