Sivakarthikeyan | "விஜய் அனுப்பிய வாழ்த்து... இது அண்ணன், தம்பி பொங்கல்" - மனம் திறந்த SK
வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அப்போது பேசிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இந்த படத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை ஒளித்து வைத்துள்ளோம்... இந்த படம் ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும் என தெரிவித்தார்.
நடிகை ஸ்ரீலீலா பேசும்போது, தான் காத்துக்கொண்டிருந்த கதாபாத்திரம் பராசக்தி மூலம் தனக்கு கிடைத்துள்ளதாக கூறினார்.
இயக்குனர் சுதா கொங்கரா பேசும்போது, பொங்கலுக்கு வெளியாகும் இரண்டு படங்களும் ஹிட் ஆக வேண்டும்... பராசக்தியை உருவாக்கும்போது துணை நின்ற பராசக்திகளுக்கு நன்றி... என தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய நடிகர் ரவி மோகன், இந்தப் படம் சுயமரியாதையை காப்பாற்றுகின்ற படம்... நானும் என் வாழ்க்கையில் சுயமரியாதையை காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறேன். சுயமரியாதையை மட்டும் யாரும் இழக்கக்கூடாது என தெரிவித்தார்.
இறுதியாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், பராசக்தியும், விஜயின் ஜனநாயகனும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், நடிகர் விஜய் மேனேஜர் வாயிலாக தனக்கு வாழ்த்து கூறியதாக தெரிவித்தார்...மேலும், “யாரு என்ன வேணாலும் சொல்லட்டும்... இந்த பொங்கல் அண்ணன், தம்பி பொங்கல்தான்... ஒன்பதாம் தேதி எல்லாரும் ‘ஜனநாயகனை கொண்டாடுங்க... பத்தாம் தேதி எல்லாரும் பராசக்திய பாருங்க“ என தெரிவித்தார்.