AVM Saravanan | Parthiban | மேசை நிறைய பணம் - ஏவிஎம் சரவணன் குறித்து பார்த்திபன் நெகிழ்ச்சி
மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணின் நினைவஞ்லிக்கு சென்று வந்ததில் தன் மனம் சற்றே சாந்தியடைந்தது எனக்கூறியுள்ள பார்த்திபன் தனக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை குறித்து விளக்கியுள்ளார்...
சக்கரக்கட்டி பாடலின்போது ஐஸ்வர்யா கால்ஷீட் விவகாரத்தில் தனக்கும் ஏவிஎம்மிற்கும் ஏற்பட்ட பிரச்சினையில் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை எடுத்துக் காட்டி AV மெய்யப்ப செட்டியாரின் ஆன்மா உங்களை மன்னிக்காது என்று ஏ.வி. சரவணனுக்கு கடுங்கோபமாய் கடிதம் அனுப்பியதாக நினைவுகூர்ந்துள்ளார்.
இருப்பினும், அவர் கொஞ்சம் கூட கோபம் கொள்ளாமல் அதை ஈடு செய்ய மேசை நிறைய பணத்தை வைத்து உருளும் AVM மெகா பந்தை விட தன் மனம் பெரிது என்பதை காட்டியதாகவும் நெகிழ்ந்துள்ளார்.
அத்துடன் அவரது கரங்களை பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டு வெளியில் வந்ததாகவும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார் பார்த்திபன்...