நடிகர் சூரியின் திரையுலக வளர்ச்சி குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியிருந்ததை, சென்னை சைதாப்பேட்டையில் நடந்த மாணவர்களுடனான நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுட்டி காட்டி பேசினார். துணை நடிகராக ஆரம்பித்த சூரிக்கு இன்று 10 இயக்குநர்களில் 7 பேர் அவரை மையமாக வைத்து கதை எழுதும் நிலைக்கு வந்து விட்டதாக லோகேஷ் கூறியிருந்தார். இதனை குறிப்பிட்டு பேசிய மா.சுப்பிரமணியன், திறமைக்கு வாய்ப்பு கிடைத்தால் எப்படி அது மலர்கிறது என்பதற்கு இது ஒரு முக்கிய எடுத்துக்காட்டு என்று கூறினார்.