பாகுபாட்டின் காரணமாக நடிகர் பிரபு தேவாவின் நடன நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக நடிகை சிருஷ்டி டாங்கே அறிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்.22-ம் தேதி நடிகர் பிரபு தேவாவின் நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரபு தேவாவின் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக சிருஷ்டி டாங்கே பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாகுபாட்டின் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், இதற்கும் பிரபுதேவாவிற்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பிரபுதேவாவின் மிகப்பெரிய ரசிகையாக நான் எப்போதும் இருப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.