1000 கோடி பட்ஜெட்... 120 நாடுகளில் படம் ரிலீஸ் என்ன படம் தெரியுமா?
ராஜமவுலி - மகேஷ்பாபு திரைப்பட ஷூட்டிங் கென்யாவுல முழுவீச்சுல நடந்துட்டு இருக்கு. எஸ்எஸ்எம்பி-29 திரைப்படம் ஆப்பிரிக்கக் காடுகளைப் பின்னணியாகக் கொண்டு 1000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட சர்வதேச படமா உருவாக இருக்கு. இந்த படத்துல, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கியக் கேரக்டர்ல நடிக்க, சுமார் 120 பேர் கொண்ட குழுவுடன் கென்யாவில் ஷூட்டிங் போயிட்டு இருக்குறதா தகவல் பரவிட்டு வருது. சர்வதேச சினிமா உலகமே ராஜமவுலியை கொண்டாடிட்டு இருக்க, அவரை நேர்ல சந்திச்சி ஆலோசனை நடத்துனது சிறப்பான தருணம்னு கென்ய அமைச்சர் முசாலிய முடாவடி நெகிழ்ந்திருந்தாரு. ஆப்பிரிக்காவுல எடுக்கப்படும் காட்சிகள்ல 95 சதவீதம் கென்யாவுலேயே எடுக்க திட்டமிட்டிருக்காங்கலாம். 2027ஆம் ஆண்டு படத்தை ரிலீஸ் பண்ண திட்டமிட்டிருக்க நிலையில், ஆசியாவின் மிகப் பெரிய படமா சுமார் 120 நாடுகள்ல படத்தை ரிலீஸ் பண்ண திட்டமிட்டிருக்காங்க.