தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-royce ) கார் வாங்கியுள்ளனர். காரின் மதிப்பு 10 கோடிக்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மனைவி நயன்தாராவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன், நீ பிறந்த தினம் எங்களுக்கெல்லாம் வரம் என்றும் என் அழகியே, உன்னை உண்மையிலேயே ஆழமாகவும், பாசமாகவும் நேசிக்கிறேன் எனவும் நெகிழ்ந்துள்ளார்..