Nayanthara | Advertisement Salary | 50 விநாடிகள் நடிக்க 5 கோடி சம்பளம் வாங்கிய நடிகை நயன்தாரா

Update: 2025-11-02 04:05 GMT

பிரபல நடிகை நயன்தாரா 50 விநாடிகள் ஒளிபரப்பாகும் விளம்பரத்திற்கு, 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா சினிமாவில் நடிக்க ஒரு படத்துக்கு 10 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இந்நிலையில் அவர் டாட்டா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க, 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்