லொள்ளு சபா நடிகர் வெங்கட்ராஜ் மறைவு
நடிகர் லொள்ளு சபா வெங்கட்ராஜ் உடல்நிலை குறைவால் சென்னையில் காலமானார். மனிதன், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், டிக்கிலோனா உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மனிதன் படத்தில், போலீஸ் கதாபாத்திரத்தில் லொள்ளு சபா வெங்கட்ராஜ் நடித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். லொள்ளு சபா வெங்கட்ராஜின் இறுதிச்சடங்கு இன்று சென்னை வேளச்சேரியில் நடைபெறுகிறது.