`தெறி' புகழ் ஜெயசீலன் மறைவு.. ``இவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா..!'' சோகத்தில் திரையுலகம்
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா, போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற ஜெயசீலன் காலமானார். 40 வயதாகும் இவர் கடந்த 2 மாதங்களாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறுதிச் சடங்குகள், வண்ணாரப் பேட்டையில் உள்ள அவருடைய வீட்டில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.