அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கா? - நடிகர் சூரி சொன்ன நச் பதில்

Update: 2025-05-20 07:11 GMT

நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள மாமன் திரைப்படம் கோவில்பட்டியில் உள்ள திரையரங்கு ஒன்றில் திரையிடப்பட்டது. இதில் நடிகர் சூரி பங்கேற்று பொதுமக்களுடன் உரையாடினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாமன் திரைப்படத்திற்கு பொதுமக்கள் தரும் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவரிடம், “அரசியலுக்கு வருவீர்களா?” என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “சினிமாவில் நல்ல வாய்ப்புகள் தேடி வருகிறது; எனவே அதனை நோக்கியே எனது பயணம் தொடரும்” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்