கடவுளே ஹீரோவாக நடித்தாலும், இயக்குனரின் கதை சொதப்பினால் படம் ஒரு ஷோவை தாண்டாது என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். லியோ ஜான் பால் இயக்கத்தில் 'மார்கன்' படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற மார்கன் பட நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி, இயக்குநரின் எழுத்து மிகவும் பலமாக இருந்தால்தான் படம் வெற்றி பெறும் என்றார்.