Chennai | Omni Bus |சென்னையில் ஆம்னி பஸ்ஸை 3 மணி நேரமாக ஒரு இன்ச் கூட நகரவிடாத பெண்-அதிர்ச்சி காரணம்
சென்னையில் பேருந்து பயணத்தின்போது, தனது முக்கிய ஆவணங்கள் உள்ள 'பை' காணாமல் போனதாக கூறி, பெண் ஒருவர் தனியார் ஆம்னி பேருந்தை சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காணாமல்போனது, சவுதி அரேபியாவிற்கு செல்வதற்காக, ராமேஸ்வரத்தில் இருந்து ஆம்னி பேருந்தில் சென்னைக்கு தாயுடன் வந்த தர்ஷினி என்பவரின் 'பை' எனத் தெரியவருகிறது. அப்பெண் விமானத்தில் சவுதி அரேபியாவிற்கு செல்ல இருந்த நிலையில், அவரின் 5 பைகளில், ஒரு 'பை' மட்டும் காணாமல் போனதாக தெரியவருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.