குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய போலீஸ் பைக்கில்சென்ற பொண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

Update: 2025-06-14 09:30 GMT

மது போதையில் காவலர் ஓட்டிச்சென்ற கார் விபத்து

மதுபோதையில் காவலர் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் பெண் படுகாயம்

இருசக்கர வாகனத்தில் சென்ற வங்கி பெண் ஊழியர் மீது கார் மோதி விபத்து

படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பூவச்சல் பகுதி வழியாக காட்டாக்கடையைச் சேர்ந்த வங்கி பெண் ஊழியரான ராஜிகா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ராஜீகாவின் வாகனத்தின் மீது மோதி அவரை வாகனத்தோடு இழுத்து சென்று சாலையோரம் காணப்பட்ட மின்கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜிகா திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்குள்ளான காரை வட்டியூர் காவு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீஸ் மனோஜ் என்பவர் ஒட்டிச் சென்ற நிலையில் அவர் மதுபோதையில் காணப்பட்டதாக போலீஸ் விசாணையில் தெரிய வந்துள்ளது. விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரை அதிர்ச்சி அடைய செய்து வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்