வேலூரில் மலைகிராம சிறுமி பலியான சம்பவம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன விஷயம்

Update: 2023-05-31 04:46 GMT

நாமக்கல் மாவட்டம் எல்லகிராய்பட்டி கிராமத்தில் முதன்முறையாக ஹீமோகுளோபினோபதி, தலசீமியா மற்றும் ரத்த சோகை உள்ளிட்ட நோய்களை கண்டறியும் பரிசோதனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து, 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் ரக மருந்துகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், அல்லேரி மலை கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்