மூன்று முறை இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாயின் பிறந்த தினம் இன்று

Update: 2022-12-25 03:17 GMT

1924ல் மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பிறந்த வாஜ்பாயி, பள்ளிக்கல்வியை குவாலியரில் முடித்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.

15 வயதில் ஆர்.எஸ்.எஸில் சேர்ந்த வாஜ்பாய், 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குபெற்றதற்காக 24 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1947 முதல் முழு நேர ஆர்.எஸ்.எஸ் ஊழியரானார். 1951ல் ஆர்.எஸ்.எஸின் அரசியல் பிரிவான ஜன சங்கத்தில் சேர்ந்த வாஜ்பாய் ஷியாம் பிரகாஷ் முகர்ஜியின் தொண்டரானார்.

1957 முதல் 50 வருடம் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய இவர், மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்கள் அவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1968ல் ஜன சங்கம் கட்சியில் தேசிய தலைவரானார்.

1975ல் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடனபடுத் திய பின், வாஜ்பாய் உள்ளிட்ட ஏராளமான எதிர்கட்சியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

1977 நெருகடி நிலை முடிவடைந்த பின், விடுதலையான வாஜ்பாய், பொதுத் தேர்தலில் வென்று, ஜனதா அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார். 1980ல்

பாரதிய ஜனதா கட்சியை அத்வானி, முரளி மனோகர் ஜோசியுடன் இணைந்து தொடங்கி, அதன் தலைவராக வழிநடத்தினார்.

1986ல் பாஜக தலைவராக அத்வானி பதவியேற்ற பின், அயோதியா பிரச்சனையை கவனப்படுத்தி, தீவிர இந்துத்துவ போக்கை பாஜக மேற்கொண்டது. 1996ல் பாஜக ஆட்சி யமைத்த போது, 16 நாட்களுக்கு பிரதமராக பதவி வகித்தார். பெரும்பான்மை கிடைக்காததால் பின்னர் ராஜினாமா செய்தார். 1998 பொது தேர்தலில் பாஜக கூட்டணி வென்ற பின், மீண்டும் பிரதமரானர்.

1998 மே மாதத்தில் அணு குண்டு சோதனையை வெற்றி கரமாக நடத்தி உலக வல்லரசுகளின் கவனத்தை இந்தியா பக்கம் திருப்பினார் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க, பாகிஸ்தான் அதிபர் முஷாராபுடன் பேச்சு வார்த்தை நடத்தி,

லாகூர் பிரகடனத்தை உருவாக்கினார்.

1999 தேர்தலில் வென்று மூன்றாம் முறையாக பிரதமரான வாஜ்பாய், தங்க நாற்காரச் சாலைத் திட்டத்தை முன்னெடுத்து, பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டார். 2004 தோல்விக்கு பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். 2018ல் தனது 93 வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி பிறந்த தினம், 1924, டிசம்பர் 25.

Tags:    

மேலும் செய்திகள்