Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02.07.2025) | 6AM Headlines | ThanthiTV
- திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையின் போது இளைஞர் உயிரிழந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பரிந்துரை...
- தெலுங்கானா மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36ஆக அதிகரிப்பு...
- கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 20 பேர் மாரடைப்பால் உயிரிழந்த விவகாரம்... உயிரிழப்புகளுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறிய கருத்தால் சர்ச்சை...
- "முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம்" முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...
- வரலாற்றில் எந்த மனிதரையும் விட அதிக சலுகைகளை அனுபவிப்பது எலான் மஸ்க்தான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து...
- இன்று இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி..முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, 2வது போட்டியில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு...