போட்டோ எடுக்க வந்த வடமாநில பயணி..மத்திய இணையமைச்சர் சொன்ன வார்த்தை -இணையத்தில் பரவும் வீடியோ

Update: 2023-06-22 09:05 GMT

மதுரை விமான நிலையத்தில் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட வடமாநில பயணியிடம், "நீங்கள் என் வலப்பக்கம்" என மத்திய இணையமைச்சர் வி.கே. சிங் நகைச்சுவையாகக் கூறிய வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது வடமாநில பயணி ஒருவர் மத்திய அமைச்சர் வி.கே. சிங் உடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்ட போது, மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்ற வி.கே. சிங், அந்த வடமாநில பயணியை தன் வலப்பக்கம் நிற்க வைத்து, "நீங்கள் என் வலப்பக்கம்" என கூறி, "நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கிறீர்கள்" என்று பொருள்பட நகைச்சுவையாகக் கூறினார். அதற்கு அந்த வடமாநில பயணியும் சிரித்துக் கொண்டே நன்றி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்