செல்போன் மூலம் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து - அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

Update: 2022-12-16 10:24 GMT

கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் செல்போன் மூலம் தமிழ்தாய் வாழ்த்து ஒலிபரப்ப பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் கூட்டரங்கில் பூஜ்ய குறைபாடு, பூஜ்ய விளைவு குறித்தான கருத்தரங்கு நடைபெற்றது. அதில், தமிழ்த்தாய் வாழ்த்து என அறிவிக்கப்பட்ட போது, யாரும் பாடலை பாட முன்வராததால், செல்போன் மூலம் தமிழ்தாய் வாழ்த்து ஒலிபரப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து, வாயால் பாடவேண்டும் எனவும் அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், ஆனால் அதனை மீறும் வகையில், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்