4 நாட்களில் இவ்வளோ கோடியா! -பாக்ஸ் ஆபிஸை பந்தாடும் 'பதான்' - ரசிகர்களுக்கு ப்ளையிங் கிஸ் கொடுத்த ஷாருக்கான்

Update: 2023-01-30 08:49 GMT

ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'பதான்' திரைப்படம், உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படத்துள்ளதாக, திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மும்பையில் உள்ள ஷாருக்கானின் இல்லம் முன்பு, ஏராளமான ரசிகர்கள் திரண்டு, ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, வீட்டின் பால்கனியில் இருந்தபடி, ரசிகர்களை நோக்கி கையசைத்த ஷாருக்கான், அவர்களுக்கு ப்ளையிங் கிஸ்(flying kiss) கொடுத்து, தனது அன்பை வெளிப்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்