நாய்க்கு விஷம் வைத்து கொன்று, ஆடுகளை திருடி சென்ற மர்மநபர்கள் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

Update: 2023-05-21 02:32 GMT

போச்சம்பள்ளி அருகே நாய்க்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, ஆடுகளை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது வீட்டிற்கு இரவில் வந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த நாய்க்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, நான்கு ஆடுகளை பிடித்துச் சென்றுள்ளனர். முன்னதாக மர்மநபர்கள் வீட்டின் கதவினை கயிற்றால் கட்டி சென்றதால், வீட்டிலிருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்