'பயணிகளின் கனிவான கவனத்திற்கு'..இனி கேட்காது..! புதிய அறிவிப்பால் Silent-டான சென்னை சென்ட்ரல்
- பயணிகளின் கனிவான கவனத்திற்கு... என்ற இந்த அறிவிப்பு எத்தனை பேருக்கு உதவியது, என்பது ரயில் பயணிகள் அனைவருக்கும் தெரியும்... இந்த அறிவிப்பு சென்னை சென்டிரல் ரயில் நிலையதில் நிறுத்தப்பட்டுள்ளது என்பதுதான் இப்போது வியப்பு செய்தி... ஆம் 150 ஆண்டுகள் பழமையான இந்த ரெயில் நிலையத்தில் ஒலிப்பெருக்கி மூலம் தகவல் தெரிவிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
- ஆம் ஒலி மாசுவை குறைக்க ஒலி அறிவிப்பு நிறுத்தப்பட்டு, காட்சியில் தெரிந்துக்கொள்ள வழிவகை செய்யப் பட்டிருக்கிறது.
- ரயில்கள் குறித்த விவரங்களை பயணிகள் தெரிந்து கொள்ள தகவல் மையங்கள் செயல்படும்; பயணிகளின் தேவைக்கு ஏற்ப தகவல் மையங்கள் அதிகரிக்கப்படும்; பயணிகளின் வரவேற்புக்கு ஏற்ப அமைதி ரெயில் நிலையம் என்ற நிலை நிரந்தரமாக்கப்படும் என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
- இதை ஒரு சாரார் வரவேற்றாலும், இந்தியாவின் பல மாநிலங்களுக்கு ரெயில் சேவையை வழங்கும் ரெயில் நிலையத்தில் இந்த நகர்வு அவ்வளவு பொருத்தமானதாக தெரியவில்லை என்பது மறுசாரர் கருத்தாக இருக்கிறது.
- ஒலிபெருக்கி அறிவிப்பின்மை பதற்றத்தை ஏற்படுத்தும் என்பது கடைசி நேரத்தில் வேகமாக ஓடிச் சென்று ரெயிலில் ஏறுபவர்களின் கருத்தாக இருக்கிறது.
- மறுபுறம் படிக்காத வர்கள், பார்வை மாற்றுதிறனாளிகள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. தங்களுக்கு உதவி யாளர்களை ரெயில்வே நியமிக்குமா? என கேட்கிறார்கள் பார்வை மாற்றுதிறனாளிகள்...