பகலில் புதரில் மறைவு... இரவில் வயலில் அட்டகாசம்.. - டார்ச்சர் செய்யும் மக்னா யானை
- நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாகத் திகழும் மக்னா யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- தொரப்பள்ளி மார்தோமா நகர், குனில் வயல், புத்தூர் வயல் போன்ற பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக சுற்றித் திரியும் ஒற்றை மக்னா காட்டு யானை பகல் முழுவதும் வனப்புதரில் பதுங்கிக் கொண்டு இரவில் ஆள்நடமாட்டம் இல்லாத போது விவசாய நிலங்களை துவம்சம் செய்து வந்தது...
- 10 வருடங்களாக வளர்க்கப்பட்டு வரும் பாக்கு, தென்னை மரங்கள், நெற்பயிர்கள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்ட நிலையில், தொரப்பள்ளி வனப்பகுதியில் உள்ள புதர்களுக்கு மத்தியில் இருந்த மக்னா யானையை முதுமலை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.
- சைரன் ஒலி எழுப்பி யானையைத் துரத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சுமார் 50-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இரவு பகலாக பணிபுரிந்து வருகின்றனர்.