மதுரை மாவட்டம் கல்லம்பட்டி கிராமத்தில் உள்ள நீர்பாசனக் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டுமென, மணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிமன்ற உத்தரவின்பேரில் அறிக்கை தாக்கல் செய்த பெரியார் வைகை படுகை கண்காணிப்பு பொறியாளர், நீர்பாசனக் கால்வாயில் 100 மீட்டர் அளவிற்கு மாசு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்தார். இந்நிலையில், கண்காணிப்பு பொறியாளரின் அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், இந்த தொகையை கழிவுநீர் கலப்பதற்கு காரணமானவர்களிடம் வசூலித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.