திண்டுக்கல், சிறுமலை மலைச்சாலையில் அதிக பனிமூட்டம் காரணமாக சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

Update: 2023-01-24 03:33 GMT

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சிறுமலை ஊராட்சி.

இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

மலைப்பகுதி முழுவதும் விவசாய சார்ந்த பகுதியாக உள்ளது.

இப்பகுதிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் இன்று திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து காலை 5.15 மணிக்கு அரசு பேருந்து சிறுமலை நோக்கி சென்றது.

பேருந்தை ஓட்டுநர் விஜயகுமார் இயக்கியுள்ளார். சேகர் என்பவர் நடத்துனர்.

பேருந்து சிறுமலையை நோக்கிச் சென்ற போது சிறுமலை 18 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் அதிக அளவு பனிப்பொழிவு மற்றும் தூரல் காரணமாக சாலை முற்றிலும் தெரியவில்லை.

இதன் காரணமாக பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஓட்டுநர், நடத்துனர் உட்பட சிறுமலை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், பழனி அம்மாள், கோபால், பாஸ்கரன் ,கார்த்தி, கணேசன் உட்பட 12 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் காயமடைந்த அனைவரும் திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்னர்.

விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்


Tags:    

மேலும் செய்திகள்