டெல்லி மதுபான ஊழல் முறைகேடு வழக்கு - நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

Update: 2023-04-04 05:49 GMT
  • டெல்லி மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • டெல்லி மதுபான ஊழல் முறைகேடு விவகாரத்தில் அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
  • அவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்ததையொட்டி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார்.
  • மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டிக்க கோரி சிபிஐ மனு தாக்கல் செய்தது.
  • அதை விசாரித்த நீதிபதி எம்.கே. நாக்பால் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 17 ந்தேதி வரை , மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்