80 சென்ட் நிலத்தால் சகோதரர்களுக்கு பயங்கர சண்டை.. - அண்ணனுக்கு விழுந்த அடி - ஷாக் வீடியோ

Update: 2023-07-20 15:14 GMT

சேலம் தாதனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஏழுமலைக்கும், அவரது சகோதரர் மணிக்கும் இடையே 80 சென்ட் நிலத்தை பங்கீடு செய்துகொள்வது தொடர்பாக, பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், மணியும் அவரது மனைவி ரேணுகாவும், ஏழுமலையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். மணி தரப்பினர் கட்டையால் தாக்கியதில், ஏழுமலை மயங்கி விழுந்துள்ளார். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே, இருதரப்பினரும் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்