அமெரிக்காவில் களையிழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் | கடும் குளிரால் வீடுகளில் மின்சாரமின்றி அவதி.
அமெரிக்காவில் பாம்ப் சூறாவளி காரணமாக பர மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. ஓகியா மாகாணத்தின் சின்சினாட்டி நகரில் வீடுகள், சாலைகள் மற்றும் வாகனங்களை போர்வை போர்த்தியது போல் கடும் பனி சூழ்ந்துள்ளது. வாட்டி வதைக்கும் குளிரால் மக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
மின்சாரம் இன்றி 2 லட்சத்திற்கும் அதிகமானோர் அவதிக்குள்ளாகியுள்ளனர். நியூயார்க்கில் பல இடங்கள் பனியால் மூடப்பட்டு திகிலூட்டும் வகையில் காட்சியளிக்கின்றன.