கேரளாவில் வாகனம் கவிழ்ந்து விபத்து... ஐயப்ப பக்தர்கள் 14 பேர் படுகாயம்

Update: 2023-01-11 15:41 GMT

கேரளாவில் வாகனம் கவிழ்ந்து விபத்து... ஐயப்ப பக்தர்கள் 14 பேர் படுகாயம்

கேரளாவில் ஐயப்ப பக்தர்களின் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயமடைந்தனர். கர்நாடகாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் அருகே பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வாகனத்தில் சென்ற அனைவரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்