மர வியாபாரி அரங்கேற்றிய பயங்கரம்... கதறும் சிறுமி, கர்ப்பிணி, பெண்கள்.. சினிமாவை மிஞ்சிய கொடூரம்

Update: 2023-06-24 10:13 GMT

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இருளர் இன குடும்பங்களை அழைத்து வந்து செங்கல்பட்டில் மரவியாபாரி படூர் பாலு என்பவர் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்தி கொத்தடிமைகளாக வைத்திருந்ததுடன், பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்தார். பாலு மீது கொத்தடிமை, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் பாலு கைது செய்யப்படாத நிலையில், அனைத்திந்திய மாதர் சங்கம், பீபள்ஸ் வாட்ச் உட்பட பல்வேறு அமைப்புகள் கூட்டாக வந்து டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாநில தலைவர் வாலண்டீனா, "படூர் பாலு பணிக்கு வந்த 10ம் வகுப்பு சிறுமி, கர்ப்பிணி, உட்பட 20க்கும் மேற்பட்டோரைத் தாக்கி தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரைக் கைது செய்யாமல் இருப்பது கண்டனத்திற்கு உரியது எனவும் தெரிவித்தார். படூர் பாலு மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கூட்டாக இணைந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் போராட்டம் நடத்த இருப்பதாக அவர் எச்சரித்தார்

Tags:    

மேலும் செய்திகள்