``12th மாணவர்கள் வலுக்கட்டாயமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தினர்’’ - 11th மாணவன் அதிர்ச்சி தகவல்

Update: 2025-07-17 03:01 GMT

அரசு பள்ளியில் ஓரினச்சேர்க்கை புகார் - 3 மாணவர்களிடம் விசாரணை

நாகர்கோவில் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில், 11ஆம் வகுப்பு மாணவன், அதே பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தன்னை வலுக்கட்டாயமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாக போலீசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இதை வெளியே கூற வேண்டாம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவரின் புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் நிலைய போலீசாரும், முதன்மை கல்வி அதிகாரியும் பள்ளியில் நேரில் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் குற்றச்செயல் உறுதி செய்யப்பட்டதாக தெரியவருகிறது. இதில் சம்பந்தப்பட்ட 3 மாணவர்களையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்