காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (15.07.2025) | Thanthi TV

Update: 2025-07-15 03:50 GMT
  • திருப்பத்தூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய நபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதிப்பு....
  • வைகோவுக்கு துரோகம் செய்தேனா என கேள்வி எழுப்பி தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் கண்ணீர் சிந்திய மல்லை சத்யா...
  • சென்னையில் ஏ.கே.மூர்த்தியின் இல்ல திருமண விழாவில், ராமதாஸை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்த அன்புமணி...விழாவுக்கு வந்த ஜி.கே. மணியை சந்தித்து நலம் விசாரிப்பு...
  • அதிமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து பேச நான் தயார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...கூட்டத்தை ஏற்பாடு செய்து அழையுங்கள், நான் வருகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவால்...
  • பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய திமுக எம்.பி கல்யாண சுந்தரம், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிப்பு...திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு...
  • டாஸ்மாக்கில் எம்.ஆர்.பிக்கு (MRP) மேல் 10 ரூபாய் வசூல் செய்தவர்களைத் தவிர அனைத்து ஊழியர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் ஊதியம் உயர்வு....எம்.ஆர்.பி தொகைக்கு மேல் கூடுதலாக வசூலிக்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில் அதிரடி நடவடிக்கை....
  • கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததன் எதிரொலி... தமிழக - கேரள எல்லையான கூடலூரில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு...
  • தமிழகத்தில் 29 எஸ்.பிக்கள், 4 ஐஜிக்கள் என 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...ஏற்கனவே 40 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றம்..
  • திருவள்ளூரில் டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு தண்டவாள விரிசலே காரணம் என மாவட்ட ஆட்சியர் தகவல்...தீ விபத்து தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ள உயர் மட்டக்குழு...
  • மறைந்த நடிகை சரோஜா தேவிக்கு இன்று இறுதிச்சடங்கு...சொந்த ஊரான தசவாரா கிராமத்தில் அவரது தாயாரின் நினைவிடத்திற்கு அருகில் உடல் அடக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு...
  • உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மக்களை ஏமாற்றும் நாடகம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...தேர்தலை மனதில் வைத்தே, மகளிர் உரிமைத்தொகை விதிகளில் தளர்வு செய்துள்ளதாக விமர்சனம்..
  • கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததன் எதிரொலி...தமிழக - கேரள எல்லையான கூடலூரில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு...
  • கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்...அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல, நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்...
  • மக்களின் குறைகளை அவர்களது இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில், "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் இன்று தொடக்கம்...திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக, ரயிலில் சிதம்பரம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு...
  • சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டார் இந்திய விண்வெளி வீர‌ர் சுபான்ஷு சுக்லா...இன்று பிற்பகல் 3 மணியளவில் பூமிக்கு சுபான்ஷு சுக்லா வந்தடைவார் என விஞ்ஞானிகள் கணிப்பு....
Tags:    

மேலும் செய்திகள்