விளையாட்டு திருவிழா (18.12.2018) ஐ.பி.எல். 12வது சீசன் வீரர்களுக்கான ஏலம்

விளையாட்டு திருவிழா (18.12.2018) ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறிய வருண்

Update: 2018-12-18 14:54 GMT
ஐ.பி.எல். 12வது சீசன் வீரர்களுக்கான ஏலம்:

ஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியது. இந்திய வீரர் ஹனுமா விஹாரியை 2 கோடி ரூபாய்க்கும், அக்சர் பட்டேலை 5 கோடி ரூபாய்க்கும், இஷாந்த் சர்மாவை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகள் அதிரடி வீரர் ஷிம்ரன் ஹெட்மரை 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணி வாங்கியது. 

இந்திய வீரர் ஜெயதேவ் உனாட்கட்டை  8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. வேகப்பந்துவீச்சாளர் மோஹித் சர்மாவை 5 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலத்தில் வாங்கியது. முகமது ஷமியை 4 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கும், மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பூரானை 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கும் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. 20 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக இருந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது.

இதே போன்று பிராத்வெயிட்டை 5 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. இலங்கை வீரர் மலிங்காவை 2 கோடி ரூபாய்க்கு மும்பை அணி ஏலத்தில் வாங்கியது. 

ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறிய வருண் :

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறிய கிரிக்கெட் வீரர். 20 லட்சம் ரூபாய் அடிப்படை விலை கொண்டு ஏலம் தொடங்கப்பட்டது. ஆனால், இவரை வாங்க சென்னை உள்ளிட்ட பல்வேறு அணிகள் கடும் போட்டி போட்டது. இறுதியாக பஞ்சாப் அணி 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலத்தில் வாங்கியது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் மதுரை அணிக்காக வருண் சக்கரவர்த்தி விளையாடினார்.  சுழற்பந்துவீச்சாளரான இவர், மதுரை அணியின் வெற்றிக்காக மிகப் பெரிய பங்கு ஆற்றியவர். நடப்பு சீசன் விஜய் ஹசாரே தொடரில் வருண சக்கரவர்த்தி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியவர். 

கிரிக்கெட் வீராக இருந்த போதே வருண் சககரவர்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வலைப் பயிற்சியின் போது பந்துவீசியுள்ளார். அஸ்வின் போலேவே உயரம் கொண்ட வருண் சக்கரவர்த்தி, அஸ்வின் தொட்ட உயரத்தை தொடுவார் என எதிர்பார்க்கலாம்.. 

மல்யுத்த வீரர் ஸ்டீவ் ஆஸ்டினுக்கு இன்று பிறந்தநாள்:

90 களில் பிறந்த குழந்தைகள் இந்த பெயரை கேட்காமல் கடந்திருக்க முடியாது. மல்யுத்த உலகையே தனது அதிரடியை கட்டிப்போட்டு வைத்திருந்தவர். ஹீரோவை மட்டுமே விரும்பிக் கொண்டிருந்த மக்கள், வில்லனையும் ரசிப்பார்கள் என்பதை உணர்த்திய நபர் STEVE AUSTIN . STONE COLD என்ற புனைப் பெயரால் WWE பொழுதுப் போக்கு மல்யுத்த தொலைக்காட்சி தொடரில் அறிமுகமான STEVE AUSTIN தனது ஆக்கோரஷமான ஸ்டைலால் ,உச்சத்தை தொட்டவர்

STUNNER என்ற மல்யுத்த ஸ்டைல் மூலம், எதிராளிகளை கதி கலங்க வைத்தவர். தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப்பைஹயம் ஒரு காலத்தில் அடித்து விளாசியுள்ளார் STEVE AUSTIN. மல்யுத்த போட்டியிலிருந்து விலகிய ஸ்டீவ் ஆஸ்டின், பின்னர் திரையலகிலும் நட்சத்திரமாக ஜொலித்தார். STEVE AUSTIN தற்போது இளம் வீரர்களுக்கு மல்யுத்த பயிற்சிகளை அளித்து வருகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்