விளையாட்டு திருவிழா 03.08.2018 - தனி ஆளாக போராடிய கோலி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாங்க. பேட்ச் அவ்வளவு தான்னு எதிர்பார்த்த போது, தனி ஆளா நின்னு போராடினாரு கேப்டன் கோலி.

Update: 2018-08-03 15:08 GMT
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாங்க. பேட்ச் அவ்வளவு தான்னு எதிர்பார்த்த போது, தனி ஆளா நின்னு போராடினாரு கேப்டன் கோலி.தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தப்போ இந்திய அணி 100 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் இருந்தது. ஹர்திக் பாண்டியாவும் போன பிறகு கோலி மீது சுமை விழந்தது. அதை ஏற்றுக் கொண்ட கோலி, ஒரு நாள் போட்டிக்கு மாறினாரு.அடிக்க வேண்டிய பால் அடிச்சாரு.. விட வேண்டிய பால் விட்டாரு.. இந்திய அணியின் பின்வரிசை வீரர்களை பேட்டிங் சான்ஸ் தராமல், கடைசி பாலில் சிங்கிள் எடுத்து விக்கெட்டுகள் விழாமல் காப்பாத்தினாரு.இப்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில்கோலி 22வது சதம் அடிச்சாரு. இங்கிலாந்து மண்ணில் முதல் சதம். இங்கிலாந்து ஸ்கொர் கிட்ட போகனும்ங்குறதாக்காக போராடினாரு கோலி. கடைசியில் 149 ரன்கள் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 13 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது.கடந்த 2014ஆம் ஆண்டில் 10 இன்னிங்ஸ் ஆடிய கோலி 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் 2018ஆம் ஆண்டு கோலி ஒரே இன்னிங்சில் 149 ரன்கள் அடிச்சி இருக்காரு.
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை