ஈராக் பிரதமர் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பிரதமர் - ஈராக் பிரதமர் காதிமி குற்றச்சாட்டு

ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஈராக் பிரதமர் முஸ்தபா- அல்-காதிமி, இத்தாக்குதலை மிகவும் கோழைத்தனமான நடவடிக்கை என்று குற்றம் சாட்டியுள்ளார்.;

Update: 2021-11-08 11:16 GMT
ஈராக் பிரதமர் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பிரதமர் - ஈராக் பிரதமர் காதிமி குற்றச்சாட்டு

ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஈராக் பிரதமர் முஸ்தபா- அல்-காதிமி, இத்தாக்குதலை மிகவும் கோழைத்தனமான நடவடிக்கை என்று குற்றம் சாட்டியுள்ளார்.தலைநகர் பாக்தாத்தில் உள்ள காதிமியின் வீட்டின் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இதில், 7 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக ஈராக் பிரதமர் உயிர் பிழைத்தார். பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை ஈரான் ஆதரவு போராளிகள் ஏற்க மறுத்ததால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில் பிரதமரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய காதிமி "இது மிகவும் கோழைத்தனமான நடவடிக்கை" எனவும், ஈராக்கின் எதிர்காலத்தை சீர்குலைக்கு முயல்பவர்களுக்கு எதிராக, மக்களுக்கு சேவையாற்ற தாங்கள் கடினமாக உழைத்து வருவதாகவும் தெரிவித்தார். ஈராக் பிரதமரைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்