நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - சவப்பெட்டிகளுக்கான தேவை வெகுவாக அதிகரிப்பு
கொரோனா உயிரிழப்புகளினால், இந்தோனேஷியாவில் சவப் பெட்டிகளுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது.;
கொரோனா உயிரிழப்புகளினால், இந்தோனேஷியாவில் சவப் பெட்டிகளுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தோனேசியாவில் உச்சமடைந்து வருகிறது.தினசரி தொற்றுதல்களின் எண்ணிக்கை 30,000 எட்டியுள்ளது. கொரோனாவிற்கு பலியானவர்கள் மொத்த எண்ணிக்கை 61,000 கடந்துள்ளது.தினமும் சுமார் 500 பேர் கொரோனாவிற்கு பலியாகி வருகின்றனர்.இந்தோனேசியாவில் கொரோனா மரணங்கள் சமீப வாரங்களில் அதிரித்துள்ளதால், சவப்பெட்டிகளுக்கான தேவைகள் அங்கு வெகுவாக அதிகரித்துள்ளது.ஜகாத்தா நகரில் சவப்பெட்டி தயாரிப்பாளரான ஒலாஸ்கர் புரபா, தினமும் 30 சவப்பெட்டிகள் விற்பனையாவதாக கூறுகிறார். இதற்கு முன்பு தினமும் 10 சவப்பெட்டிகள் தான் விற்பனையானதாக இவர் தெரிவிக்கிறார். சவப்பெட்டி தயாரிக்க தேவையான பிளைவுட் விலை அதிகரித்து, அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்.இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் பாலி தீவுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜாவா தீவில் மருத்துவமனைகளில் 90 சதவீத படுக்கைகள் நிரம்பியுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சரகம் கூறியுள்ளது.கொரோனாவின் கோர பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது, இந்தோனேஷியா...