ஆசிரியரை கவுரவித்த மாணவர் : விமானத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

தாம் ஓட்டும் விமானத்தில் பயணித்த தமது ஆசிரியரை, அந்த விமானி கட்டியணைத்து நெகிழ்ந்த காட்சி, சமூக வலை தளங்களில், வேகமாக பரவி வருகிறது.

Update: 2018-12-02 07:25 GMT
தாம் ஓட்டும் விமானத்தில் பயணித்த தமது ஆசிரியரை, அந்த விமானி கட்டியணைத்து நெகிழ்ந்த காட்சி, சமூக வலை தளங்களில், வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் துருக்கி நாட்டில் நடந்துள்ளது. அந்த நாட்டில் ஆசிரியர் ஒருவர் விமானத்தில் பயணம் செய்வதற்காக ஏறியுள்ளார். அப்போது, திடீரென விமானியிடம் இருந்து ஒரு அழைப்பு வருகிறது. அதில், ஆசிரியர் குறித்தும் அவரது பணி குறித்தும் அந்த விமானி உருக்கமாக விவரிக்கிறார். இறுதியில், அந்த விமானி, தாம் அந்த ஆசிரியரின் மாணவன் என்றும், தமக்கு பிடித்தமான ஆசிரியர் இவர் தான் என்றும் எல்லோருக்கும் கேட்கும்படி மைக்கிலேயே அறிவித்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்