குட் நியூஸ் இல்லை ஷாக் நியூஸ்..! கோடை இடியை உச்சந்தலையில் இறக்கிய வானிலை மையம்

Update: 2024-04-27 11:15 GMT

தமிழ்நாட்டில் கோடைக்கால பருவமழை நடப்பாண்டில் இயல்பை விட 83 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் ஒன்றாம் தேதி கோடைக்கால வெயில் தொடங்கியுள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டில் தினசரி வெப்பநிலை உயர்ந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் தற்போது வரை, தமிழ்நாட்டில் பெய்துள்ள மழையின் அளவு குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி இந்த காலகட்டத்தில் வழக்கமாக 54.7 மில்லி மீட்டர் மழை பதிவாகும் என்றும், ஆனால் நடப்பாண்டில் 9.4 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது வழக்கத்தை விட 83 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்