மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை - "முற்றிலும் அகற்றிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை"
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முழுமையாக ஒழித்திட தேவையான பல்வேறு நடவடிக்கைகளை அரசு, தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் பகுதியாக, முப்பது எண்ணிக்கையில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறு கழிவுநீர் அடைப்பு நீக்கும் இயந்திரம் மற்றும் தூர் வாரும் இயந்திரம், எட்டு எண்ணிக்கையில் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறு கழிவு நீர் அடைப்பு நீக்கும் இயந்திரம் என, 54 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 66 எண்ணிக்கையில் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மாநில அரசின் நிதிப் பங்களிப்புடன், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்த முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.