பிரபல பழம்பெரும் நடிகை மரணம்..திரையுலகம் அதிர்ச்சி

Update: 2023-12-09 04:20 GMT

கடந்த 1949ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான லீலாவதி, கன்னட சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தார். இதுவரை 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள லீலாவதி, பல்வேரு விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே, நெலமங்களாவில் லீலாவதி வசித்து வந்துள்ள நிலையில், வயதுமூப்பு காரணமாக தனது 85 வயதில் காலமானார். லீலாவதியின் மறைவுக்கு தமிழ், கன்னட திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்