நடப்பு நிதியாண்டின் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், வணிக வரித் துறையில் கடந்த நிதி ஆண்டை விட 3 ஆயிரத்து 727 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். சென்னையில் நடந்த மாதாந்திர பணித்திறனாய்வு கூட்டத்தில், வரி வருவாய் அதிகப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிலுவையில் உள்ள இனங்களை ஆராய்ந்து விரைந்து முடிக்கவும் ஆணையர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். தரவுகளின் உண்மைத் தன்மையை கண்டறிய அதிநவீன மென்பொருள்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.