சென்னையை உலுக்கிய சம்பவம் சிறுமி உடல்நிலை? - தந்தை சொன்ன தகவல்

Update: 2024-05-26 10:15 GMT

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பூங்காவில், கடந்த 5-ஆம் தேதி இரண்டு ராட்வீலர் வளர்ப்பு நாய்கள் கடித்ததில், 5 வயது சிறுமி படுகாயம் அடைந்தார். சிறுமியின் சிகிச்சை செலவை சென்னை மாநகராட்சி ஏற்ற நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை நிறைவடைந்து கடந்த 19-ஆம் தேதியே சிறுமி வீட்டிற்கு திரும்பி விட்டதாகவும், வீடு திரும்பியதை மருத்துவமனை நிர்வாகமும், காவல் துறையும் வெளியே தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டதாகவும், சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார். மேலும் சிறுமி தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்த அவர், ஜூன் 3-ஆம் தேதி மீண்டும் மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்