ஓட்டல் உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் - உணவில் பல்லி இருந்ததாக குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் ஓட்டல் உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.;

Update: 2021-11-06 02:48 GMT
கலைவாணி என்ற பெண் அப்பகுதியில் உள்ள உணவத்தில் சாப்பிட்டு விட்டு, தனது குழந்தைகள் இருவருக்கு பார்சல் வாங்கி வந்துள்ளார். உணவை சாப்பிட்ட குழந்தைகள் இருவரும் சில மணி நேரத்தில் மயங்கி விழ கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே உணவில் பல்லி இருந்ததாக, கலைவாணி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதால், உணவகத்தை மறு உத்தரவு வரும் வரை மூட சங்கராபுரம் தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்