நகையின் தரம் குறைவாக இருப்பதாக கூறி நகைக்கடையை சூறையாடிய வாடிக்கையாளர் - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

தஞ்சாவூரில் நகையின் தரம் குறைவாக இருப்பதாக கூறி நகைக் கடையில் புகுந்து வாடிக்கையாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-05-01 06:21 GMT
நகையின் தரம் குறைவாக இருப்பதாக கூறி நகைக்கடையை சூறையாடிய வாடிக்கையாளர் - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு 

தஞ்சாவூரில் நகையின் தரம் குறைவாக இருப்பதாக கூறி நகைக் கடையில் புகுந்து வாடிக்கையாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் அருகே காந்திஜி சாலையில் கமல்சந்த் ஜெயின் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த கடையில் வாங்கிய நகையின் தரம் குறைவாக இருந்ததாக வாடிக்கையாளர் மற்றும் அவரது உறவினர்கள் கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தெடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்