கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கிக்கு கீழ் கொண்டு வரும் சட்டம் தமிழகத்திற்கு தேவையில்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கிக்கு கீழ் கொண்டு வரும் சட்டம் தமிழகத்திற்கு தேவையில்லை என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.;
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கிக்கு கீழ் கொண்டு வரும் சட்டம் தமிழகத்திற்கு தேவையில்லை என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுத உள்ளார் என்றும் பிற மாநிலங்களில் முறைகேடுகள் நடந்ததால் தான் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்றும் கூறினார்.