சங்க கால தமிழர்கள் வாழ்விட ஆதாரங்கள் கண்டுபிடிப்பு
ஈரோடு மாவட்டம் கொடுமணலில் கடந்த 1ஆம் தேதி முதல் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.;
ஈரோடு மாவட்டம் கொடுமணலில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்க கால தமிழர்களின் வாழ்விடத்திற்கான முக்கிய ஆதாரங்கள், வண்ணமயமான தொழில் புரிந்ததற்கான சான்றுகள், முதுமக்கள் தாழி என பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்து வருகிறது. கடந்த 1ஆம் தேதி முதல் கொடுமணலில் இந்த அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இரும்புகள், பளிங்கு கற்கள், கல்மணி சங்குகள், வளையல் கண்ணாடிகள் உள்ளிட்ட அரிய வகைப் பொருட்கள், அதில் கிடைக்க பெற்றுள்ளன. அதேபோல் மனித எலும்புகள், சரளை மண் ஓடுகள், வீடுகளின் தரைத்தளம், உள்ளிட்டவைகளையும் அகழாய்வின் போது தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\