வேலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 45 வயது நபர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.;

Update: 2020-04-08 01:42 GMT
தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புடன், வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதான சாதிக் பாட்ஷா என்பவர் உயிரிழந்தார். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உறுதிபடுத்தியுள்ளார். மேலும் உயிரிழந்தவருக்கு வெளிநாட்டு தொடர்பு எதுவும் இல்லை என்று கூறிய ஆட்சியர், உயிரிழந்தவரின் உடல் கொரோனா நடைமுறைப்படி எரியூட்டப்படும் என்றும் தெரிவித்தார். இதனிடையே, உயிரிழந்த சாதிக் பாட்ஷா வசித்து வந்த சைதாப்பேட்டை பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்