தூத்துக்குடியில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை : பெண் உடனான தொடர்பை கண்டித்ததால் வெறிச்செயல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, பட்டப்பகலில் பெட்டிக்கடைக்காரர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2020-02-21 03:24 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, பட்டப்பகலில் பெட்டிக்கடைக்காரர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த அழகுராஜன் என்பவர், தூத்துக்குடி கழுகுமலைக்கு பொருள்கள் வாங்குவதற்காக சென்ற போது, மர்ம நபர் ஒருவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, கொலை செய்தவரை கைது செய்ய கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதோடு, அந்த பக்கமாக சென்ற தென்காசி மாவட்ட ஆட்சியரின் காரையும் முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மகேந்திரன் என்பவர் கழுகுமலை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் விசாரித்ததில், மகேந்திரனுக்கு ஆலங்குளத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதை கண்டித்ததால் அழகுராஜனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்